யார் வளர்ப்பது சாதியை ?
எங்கள் ஊர் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி,அருகில் உள்ள
"கன்னித் தமிழ்நாடு"என்ற கிராமம் இங்கு வசிப்பவர்கள்
இரண்டு சாதியை சேர்ந்த வர்கள் மட்டுமே (தலித் & வன்னியர்) மற்ற எந்த சதியும் அங்கு இல்லை எந்த நிலையிலும் இங்கு சாதிப்பிரச்சனை வந்தது இல்லை ,காரணம் புரிந்துணர்வு ,எப்படி ? இரு தரப்பாரும் கல்வியில் முழு ஈடு பாடு ! வேலையில் பங்கீடு ! எப்படி தலித் நிலத்தில் வன்னியர் பெண்கள் ஆண்கள் வேலை செய்வார்கள்
வன்னியர் நிலத்தில் தலித் பெண்கள் ஆண்கள் வேலை செய்வார்கள் (இங்கு விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவையும் உள்ளன ) இந்த ஊர் பள்ளியில் பத்தாம் வகுப்புவரை உள்ளது இப் பள்ளியில் தன்னார்வ கணினி ஆசிரியர் ஒரு தலித் இளைஞன் இவருக்கான ஊதியம் இந்த ஊரைச் சேர்ந்த( அமெரிக்காவில் வாழும் வன்னியர்) தருகின்றார் ,அதற்கான கணனி தேவையான உபகரணங்கள் ஆகியவையும் கூட வங்கி தந்துள்ளார், இந்த கிராமத்தில் இரு சமூகத்தவரும் மிக நன்றாக ஒன்றை புரிந்து கொண்டுள்ளனர், கல்வியும் பொருளாதாரமும் தான் நம் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான முக்கிய வழியென , அது சரி இதில் சாதிய ஏற்றத்தாழ்வு எப்படி மறையும் என நீங்கள் கேட்பது புரிகிறது ! எங்கள் வீட்டில் வேலை செய்யும் பொது எங்கள் வீட்டு தட்டிலும் எங்கள் வீட்டீனுள்ளே உட்கார்ந்தும் ஒரே உணவை ஒரே நேரத்தில் உண்பதும் , நாங்கள் அவர்கள் வீட்டில் உண்பதும் அவர்ளோடு சமமாக அவர்கள் வீட்டு நிகழ்வு களில் கலந்து கொண்டு மொய் எழுதுவதும்
அவர்கள் எங்கள் வீடுகளில் வந்து மொய் எழுதுவதும் இன்றும் சிறப்பாக நாடக்கிறதே இது மாற்றம் இல்லையா ? அவர்கள் எங்களை அண்ணா ,தம்பி ,அக்கா ,தங்கை ,அம்மா என்று அழைப்பதும் நாங்கள் அவர்களை தம்பி , அண்ணன் என அழைப்பதும் தினசரி நிகழ்வல்லவா ? ஒன்றை நான் பதிவு செய்ய விரும்புகிறேன் 1988 ஆம் ஆண்டு அப்போது நான் கைத்தறி நெய்து கொண்டு இருந்தேன் (எங்கள் வீட்டிலேயே தறி இருந்தது) அப்போது
பக்கத்து வீட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஜெயபால் என்ற( சிறுவனை 12 வயது இருக்கலாம் எனக்கு 18 வயது ) அவனை கூப்பிட்டு மாடு மேய்த்த நேரம் போக மீதி நேரத்தில் இங்கு வா நான் உனக்கு தறி நெய்ய கற்றுத் தருகிறேன் என கூரி தறி நெய்வதை கற்றுக்கொடுத்தேன் அவனும் கற்றுக்கொண்டான், அதன் பின் இன்னும் ஒரு தறி போட்டு அவனை நெய்யச் சென்னேன் அப்போது நான்கு கைலிகள் நெய்தால் 40 ரூபாய் கூலி
அவன் மூன்று நாளில் நெய்து விடுவான் ,எங்கள் ஊர் தலித் ஒருவன் முதன் முதலில் தறி நெய்வது அவன் ஒருவன் தான் (வழக்கமாக எங்கள் பகுதியில் முதலியார் சமூகம் தான் தறி நெய்வார்கள்) வயித்து சோத்துக்காக மாடு மேய்த்துக் கொண்டிருந்தவனை முதலில் உழைப்பாளி ஆக்கினேன் பின் அவனே அவன் வீட்டில் தறி போட்டு நெய்வதற்கு உதவி செய்தேன் ,இப்போது எங்குமே கைத்தறி இல்லை தொழில் நசிந்து போனது
அதன் பின் இன்றும் என் தம்பியோடு ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்க்கிறான் , நான் அவனுக்கு கற்றுக்கொடுத்தது தொழில் ,இன்றும் நான் ஊருக்கு சென்றால் என்னை வந்து பார்த்து நலம் விசாரிப்பான் நானும் அவனைப் பார்த்தால் நலம் விசாரிப்பேன்( நான் இப்போது வெளி நாட்டில் வேலை செய்கிறேன் ) இன்னும் பெண் எடுப்பது பெண் கொடுப்பது மட்டுமே மீதி என நினைக்கிறேன் இவைகள் கூட மாறும் காலம் தூரம் இல்லையென்றே நினைக்கிறேன் , இன்னும் இருக்கும் சிறு இடை வெளி கூட மாறும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை.நீங்களே நேரில் சென்று "கன்னித்தமிழ் நாட்டில்" பார்க்கலாம்,நான் முழுமையாக நம்புவது என் நம்பிக்கையை என் குடும்பம் பட்டினி கிடந்தால் எவனும் ஒரு படி அரிசி வாங்கித் தருவது இல்லை, பின் என்னடா சாதி மதம்.
தெய்வத் தாலாகா னெனினும் முயற்சி!
தன்மெய் வருத்தக் கூலிதரும்!
(குறள்)
நான் ஏன் இந்த நிலையில் இருக்கிறேன் உன்னை நீயே கேட்டுப்பார் ,நெருக்கடியில் தான் மனிதன் சிறப்பாக சிந்திக்கிறான், உன் கைகள் உன்னிடமே யாரும் அதை திருடவில்லை,உன் உழைப்பை திருடியவர்களை நீ அடையாளம் காண் உனுக்கு விடிவுண்டு ,பனை மரம் ஏறுபவனுக்கு கடைசிவரை எவனும் கால் தாங்க முடியாது, என்பது வழக்கு .எந்த சாதீய தலைவனாலும்,சதிக் கட்சி களாலும் சாதியை ஒழிக்க முடியாது அதை வேறு எவனும் வந்து உனுக்கு செய்ய மாட்டான் (உலகத்தில் ஏற்றத் தாழ்வு இல்லாத நாடேயில்லை)ஆனாலும் கல்வியும் பொருளாதாரமும் இரண்டு கண்கள் இதுவே நம் சமூக முன்னேற்றத்திற்கு வழிகாட்டி
நன்றி
என்றும் அன்புடன்
கிருஷ்ணசாமி சேகர்
கன்னித்தமிழ் நாடு
No comments:
Post a Comment