Monday, December 24, 2012




                                எப்படி நேர்ந்தது இந்த அவலம் ?


நான் 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் (சீனாவின் டாலியான் மாகாணதில்)  இருந்து " சொங் டொக் பிரைட் "என்ற கப்பலில் வியட்நாம் நோக்கி பயணத்தை தொடங்கினோம் (இந்த கப்பல் சாதாரண கப்பல் அல்ல கடலில் இருந்து குருடாயில் எடுப்பதற்கான கப்பல் இதை FPSO என நாங்கள் அழைப்பது இது கடலில் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக நங்கூரம் இடப்பட்டு கட்டப்பட்டிருக்கும் இது ஒரு எண்ணை துரப்பண்ண தொழிற்ச்சாலை )
சரி நான் வியட்நாம் போவது முதல் முறை என்பதால் எனக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காரணம் இளம் வயதில் நான் தேடித் தேடி படித்த வரலாற்று புத்தகங்கள் தான் காரணம் ,வியட்நாமியர்கள் பிரஞ்சு காலனியை எதிர்த்து போராட்டத்தை தொடங்கி , உலகத்திலேயே அமெரிக்காவையே தோற்கடித்த வரலாறு அவர்கள் உடையது அல்லவா ? ஹோ சி மின்னின் வரலாற்றை எத்தனை முறை வாசித்திருக்கிறே அந்த மண்ணை நான் காண்பதற்காக என் உள்ளம் மிகுந்த ஆவலோடு இருந்தது , தென் சீனக் கடலில் ,தய்வான் , பிலிப்பின் வழியாக 32 ஆம் நாள் வியட்நாம் நாட்டின் 'வுங்க்தாவ்' கடற் கரையை அடைந்தோம்,நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன் அப்போதும் கூட அவர்களின் இடையறாத போராட்டமே என் முன் நின்றது ,எங்கள் நண்பர்களோடு நாங்கள் சிறிய படகு ஏறி கரையை அடைந்தோம் அங்கிருந்து எங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த ஹோட்டலுக்கு சென்றோம், நானும் நண்பர் (ரமணாவும் இவர் ஆந்தராவை சேர்ந்தவர்) இருவரும் மாலை 4 மணிவாக்கில் வெளியில் கிளம்பி அந்த கடற்கரை நகரைத்தைச்  சுற்றிப்பார்க்கலாம் என்பது எங்களின் திட்டம் ,முதலில் பணத்தை மாற்ற வேண்டும் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் 100 சிங்கப்பூர் டாலரை கொடுத்து பணத்தை மாற்றினேன் , பத்து லட்சம் டொங் வியட்நாம் பணம் கொடுத்தார்கள் அதுவே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது ,அதன் பின் மேலும் அதிர்ச்சி ஹோட்டலை விட்டு தெருவில் இறங்கி நடக்கத்தொடங்கியதும் ஒரு 30 அல்லது 35 வயது மதிக்கத்தக்க பெண் எங்களை பார்த்து 'சார் யு வாண்ட் யங் லேடி' என்றார் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை 'நோ ' என்று சொல்லிவிட்டு இன்னும் கொஞ்சதூரம் சென்றதும் 8 அல்லது 10 வயது சிறுவன் ஒருவன் ஓடி வந்து 'ரமணாவின் 'காலை பிடித்துக்கொண்டான் சார் கிவ் மி ஒன் டாலர் , சார் கிவ் மி ஒன் டாலர் ,(பள்ளி சீருடையை  கூட கழட்ட வில்லை ) சடாரென ஆளுக்கு ஒரு டாலர் காசை கொடுத்ததும் அவன் எடுத்துக்கொண்டு ஓடுகிறான் தூரத்தில் அவனது  அப்பா , அம்மா அவனது தங்கையாக இருக்கும் என நினைக்கிறேன் ஒரு பெண் (நம் ஊரில் கூட நிறைய சிறு பிள்ளைகள் பிச்சை எடுக்கிறார்கள் )
ஆனால் எனக்கு என்னவோ போல் இருந்தது ,ஒரு 150 மீட்டர் தூரம் கூட நடந்து இருக்க மாட்டோம் அதற்குள் ஆறு , ஏழு பேர்கள் வந்து உங்களுக்கு எப்படியான பெண் வேண்டும் என கேட்கிறார்கள் ,நாங்கள் இருவரும் செய்வது அறியாமல் அங்கிருக்கும் ஒரு கடைக்குள் நுழைந்தோம் ,அந்த நேரம் 
வியட்நாமை பற்றிய என்னுடைய எல்லா கனவுகளும் தகர்ந்து போனது ,பள்ளிக் கூட வாசலில் நின்று பெண் பிள்ளைகளை ஹோட்டலுக்கு கூட்டிச் செல்வதையும் ,பெண்களை சந்தையில் காய் கறி விற்பது போல் கூவிக் கூவி விற்பதையும் வியட்நாமில் கண்டேன் , நான் பல நாடுகளுக்கும் சென்று இருக்கிறேன்,சிங்கப்பூர் ,மலேசியா ,தாய்லாந்து ,சீனா ,தென்னாப்ரிக்கா,பிரேசில் என .எல்லா நாடுகளிலும் பாலியல் தொழில் இருக்கிறது ஆனால் வியட்நாமை போல் அல்ல ,அன்று இரவு சரியான உறக்கம் இல்லை ஏன் இந்த நிலை ? உண்ண உணவில்லை வறுமை ,சரியான கல்வி இல்லை, பெறும் பகுதி (எந்த நேரமும் போதை) ஆண்கள் வேலைக்குச் செல்வதுயில்லை எல்லாம் பெண்கள்தான் , ஆம் டாலரின் முன் சுய பொருளாதாரத்தை 
மட்டும் வைத்துக்கொண்டு எதையும் செய்ய முடியாமல் போனது , வியட்நாமில் கம்யூனிசம் கேள்விக்குறியாகி இருக்கிறது என்றே நான் கருதுகிறேன் ,
இரண்டு நாள் விடுமுறையும் , மூன்று நாள் ட்ரெயினிங் (ஹெலிக்கப்டரில் விபத்து ஏற்பட்டு கடலில் விழுந்ததால் எப்படி தப்பிப்பது ,கப்பலில் தீ விபத்து ,அல்லது கப்பல் மூழ்குவது என ஏதும் நடந்ததால் )எப்படி தற்காத்துக் கொள்வது என்று, இதையெல்லாம் முடித்து விட்டு ஆறாம் நாள் ஹெலிக்காப்டரில் 2 மணி நேரம் பயணித்து எங்கள் கப்பல் இருக்கும் துறப்பண்ண மேடையை அடைந்தோம் ,அந்த நாட்டின் சட்டப்படி முப்பது நாட்கள் தான் கடலின் உள்ளே இருக்க முடியும் (இது நாட்டுக்கு நாடு மாறுபடும்) பின் மீண்டும் கரைக்கு வந்து 10 நாள் கழித்து தான் கடலுக்குள்  போகமுடியும் நாங்கள் தங்கி இருப்பது எல்லாம் ஸ்டார் ஹோட்டல் தான், எல்லாம் கம்பனி தருகிறது என்னிடம் கேட்டார்கள் நீங்கள் ஹோட்டலில் தங்கி இருக்கிறீர்களா அல்லது ஊருக்கு போய் வருகிறீர்களா என நான் ஊருக்கு போகிறேன் என்று சொல்லி விட்டேன் அவர்களும் ஒத்துக் கொண்டார்கள் ,காரணம் விமான பயணச் சீட்டை விட ஹோட்டல் பில் அதிகம் ,அந்த நகரத்தில் இருந்து ஹோ சி மின் சிட்டிக்கு வரவேண்டும் விமான நிலையம் ,இப்படியே இரண்டு பயணம் முடிந்தது மூன்றாவது பயணம் நான் ஹோ சி மின் சிட்டி விமான நிலையத்தில் என்னுடைய பைகளை எடுத்துக் கொண்டு வெளியேறும் போது கஸ்டம்ஸ் அதிகாரி என்னுடைய பாஸ் போர்ட்டை வாங்கி நீண்ட நேரம் பார்த்தார் அதில் ஒவ்வொரு மாதமும் வியட்நாம் வந்து போனதற்கான முத்திரை பதியப்பட்டிருந்ததை பார்த்து நீ என்ன வேலை பார்க்கிறாய் எங்கே பார்க்கிறாய் என 
எழுதிக் கொடு என்றார் ,நான் வேலை பார்ப்பது கடலின் உள்ளே கப்பலில் அதற்கு முகவரியெல்லாம் எழுத முடியாது நான் என்னுடைய கம்பனியின் 
வியட்நாம் முகவரி அட்டையை தந்தேன் ,அவருக்கு நம்பிக்கை வரவில்லை சரி எங்கிருந்து வருகிறாய் என்றார் ,இந்தியாவில் இருந்து என்றேன் சரி  உன்னுடைய 'ஐ டி'கார்டை கொடு என்றார் நான் இந்தியாவில் ஐ டி கார்ட் இல்லை என்று சொல்லி என்னுடைய ஓட்டுனர் அட்டையையும் இன்கம்டேசன் அட்டையையும் கொடுத்தேன் ,பின்பும் கூட அவனுக்கு என் மேல் நம்பிக்கை வரவில்லை என்னை, கூட்டிக் கொண்டு மேலதிகாரியிடம் சென்றான் அவனும் எல்லாவைற்றையும் சோதித்து விட்டு ,என்னை பார்த்து 'யு ஆர் எல் டி டி யி 'என்றான், நானும் சிரித்துக் கொண்டே 'ஒய் யு ஆஸ் மி திஸ் கொஸ்டின் 'என்றேன் ,அதற்கு அவன் சொன்னான் உன்னை போன்ற முகபாவம் உடையவர்கள்' பைட்டிங் டு சிறிலங்கன் ஆர்மி ,ஐ ஸீ த டிவி நியூஸ்  என்றான் ' இதற்குள் 40 நிமிடங்கள் ஆகிவிட்டிருந்தன என்னை கூட்டிச் செல்ல கம்பனியில் இருந்து வந்த கார் ட்ரைவர் என்னை தேடிக்கொண்டு கஸ்டம்ஸ் கவுண்டர் வரை வந்து விட்டார் பின் அவர்களுக்குள் வியட்நாமிய மொழியில் பேசிக்கொண்டு ஏதோ முடிவு செய்து வெளியில் விட்டார்கள் .நான் இதை என் வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வுகளில் ஒன்றாகவே நினைக்கிறேன் .

நன்றி 
என்றும் அன்புடன் 
கிருஷ்ணசாமி சேகர் 
கன்னித்தமிழ் நாடு  
            

Wednesday, December 19, 2012

யார் வளர்ப்பது சாதியை ?

              யார் வளர்ப்பது சாதியை ?

எங்கள் ஊர் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி,அருகில் உள்ள
 "கன்னித் தமிழ்நாடு"என்ற கிராமம் இங்கு வசிப்பவர்கள்
 இரண்டு சாதியை சேர்ந்த வர்கள் மட்டுமே (தலித் & வன்னியர்) மற்ற எந்த சதியும் அங்கு இல்லை எந்த நிலையிலும் இங்கு சாதிப்பிரச்சனை வந்தது இல்லை ,காரணம் புரிந்துணர்வு ,எப்படி ? இரு தரப்பாரும் கல்வியில் முழு ஈடு பாடு ! வேலையில் பங்கீடு ! எப்படி தலித் நிலத்தில் வன்னியர் பெண்கள் ஆண்கள் வேலை செய்வார்கள்  
வன்னியர் நிலத்தில் தலித் பெண்கள் ஆண்கள் வேலை செய்வார்கள் (இங்கு விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவையும் உள்ளன ) இந்த ஊர் பள்ளியில் பத்தாம் வகுப்புவரை உள்ளது இப் பள்ளியில் தன்னார்வ கணினி ஆசிரியர் ஒரு தலித் இளைஞன் இவருக்கான ஊதியம் இந்த ஊரைச் சேர்ந்த( அமெரிக்காவில் வாழும் வன்னியர்) தருகின்றார் ,அதற்கான கணனி தேவையான உபகரணங்கள் ஆகியவையும் கூட வங்கி தந்துள்ளார், இந்த கிராமத்தில் இரு சமூகத்தவரும் மிக நன்றாக ஒன்றை புரிந்து கொண்டுள்ளனர், கல்வியும் பொருளாதாரமும் தான் நம் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான முக்கிய வழியென , அது சரி இதில் சாதிய ஏற்றத்தாழ்வு எப்படி மறையும் என நீங்கள் கேட்பது புரிகிறது ! எங்கள் வீட்டில் வேலை செய்யும் பொது எங்கள் வீட்டு தட்டிலும் எங்கள் வீட்டீனுள்ளே உட்கார்ந்தும் ஒரே உணவை ஒரே நேரத்தில் உண்பதும் , நாங்கள் அவர்கள் வீட்டில் உண்பதும் அவர்ளோடு சமமாக அவர்கள் வீட்டு நிகழ்வு களில் கலந்து கொண்டு மொய் எழுதுவதும் 
அவர்கள் எங்கள் வீடுகளில் வந்து  மொய் எழுதுவதும்  இன்றும் சிறப்பாக நாடக்கிறதே இது மாற்றம் இல்லையா ? அவர்கள் எங்களை அண்ணா ,தம்பி ,அக்கா ,தங்கை ,அம்மா என்று அழைப்பதும் நாங்கள் அவர்களை தம்பி , அண்ணன் என அழைப்பதும் தினசரி நிகழ்வல்லவா ? ஒன்றை நான் பதிவு செய்ய விரும்புகிறேன் 1988 ஆம் ஆண்டு அப்போது நான் கைத்தறி நெய்து கொண்டு இருந்தேன் (எங்கள் வீட்டிலேயே தறி இருந்தது) அப்போது 
பக்கத்து வீட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஜெயபால் என்ற( சிறுவனை 12 வயது இருக்கலாம் எனக்கு 18 வயது ) அவனை கூப்பிட்டு மாடு மேய்த்த நேரம் போக மீதி நேரத்தில் இங்கு வா நான் உனக்கு தறி நெய்ய கற்றுத் தருகிறேன் என கூரி தறி நெய்வதை கற்றுக்கொடுத்தேன் அவனும் கற்றுக்கொண்டான், அதன் பின் இன்னும் ஒரு தறி போட்டு அவனை நெய்யச் சென்னேன் அப்போது நான்கு கைலிகள் நெய்தால் 40 ரூபாய் கூலி
 அவன் மூன்று நாளில் நெய்து விடுவான் ,எங்கள் ஊர் தலித் ஒருவன் முதன் முதலில் தறி நெய்வது அவன் ஒருவன் தான் (வழக்கமாக எங்கள் பகுதியில் முதலியார் சமூகம் தான் தறி நெய்வார்கள்) வயித்து சோத்துக்காக மாடு மேய்த்துக் கொண்டிருந்தவனை முதலில் உழைப்பாளி ஆக்கினேன் பின் அவனே அவன் வீட்டில் தறி போட்டு நெய்வதற்கு உதவி செய்தேன் ,இப்போது எங்குமே கைத்தறி இல்லை தொழில் நசிந்து போனது 
அதன் பின் இன்றும் என் தம்பியோடு ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்க்கிறான் , நான் அவனுக்கு கற்றுக்கொடுத்தது தொழில் ,இன்றும் நான் ஊருக்கு சென்றால் என்னை வந்து பார்த்து நலம் விசாரிப்பான் நானும் அவனைப் பார்த்தால் நலம் விசாரிப்பேன்( நான் இப்போது வெளி நாட்டில் வேலை செய்கிறேன் ) இன்னும் பெண் எடுப்பது பெண் கொடுப்பது மட்டுமே மீதி என நினைக்கிறேன் இவைகள் கூட மாறும் காலம் தூரம் இல்லையென்றே நினைக்கிறேன் , இன்னும் இருக்கும் சிறு இடை வெளி கூட மாறும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை.நீங்களே நேரில் சென்று "கன்னித்தமிழ் நாட்டில்" பார்க்கலாம்,நான் முழுமையாக நம்புவது என் நம்பிக்கையை  என் குடும்பம் பட்டினி கிடந்தால் எவனும் ஒரு படி அரிசி வாங்கித் தருவது இல்லை, பின் என்னடா சாதி மதம். 
தெய்வத் தாலாகா னெனினும்  முயற்சி! 
தன்மெய் வருத்தக்  கூலிதரும்!             
(குறள்)
நான் ஏன் இந்த நிலையில் இருக்கிறேன் உன்னை நீயே கேட்டுப்பார் ,நெருக்கடியில் தான் மனிதன் சிறப்பாக சிந்திக்கிறான், உன் கைகள் உன்னிடமே யாரும் அதை திருடவில்லை,உன் உழைப்பை திருடியவர்களை நீ அடையாளம் காண் உனுக்கு விடிவுண்டு ,பனை மரம் ஏறுபவனுக்கு கடைசிவரை எவனும் கால் தாங்க முடியாது, என்பது வழக்கு .எந்த சாதீய தலைவனாலும்,சதிக் கட்சி களாலும் சாதியை ஒழிக்க முடியாது அதை வேறு எவனும் வந்து உனுக்கு செய்ய மாட்டான் (உலகத்தில் ஏற்றத் தாழ்வு இல்லாத நாடேயில்லை)ஆனாலும் கல்வியும் பொருளாதாரமும் இரண்டு கண்கள் இதுவே நம் சமூக முன்னேற்றத்திற்கு வழிகாட்டி   

நன்றி 
என்றும் அன்புடன் 
கிருஷ்ணசாமி சேகர் 
கன்னித்தமிழ் நாடு        
 

Tuesday, December 18, 2012

இயற்கை


DEC
16

இந்த உலகம் நம் சந்ததிகளுக்கானது !அதை நாம் அவர்களுக்காக விட்டுச்செல்ல வேண்டும் !
கடவுளின் பெயரால் ,மதத்தின் பெயரால் ,ஜாதியின் பெயரால்,அறிவியலின் பெயரால் அல்லது எதனினும் பெயராலும் இயற்கையை சிதைப்பதை நாம் 
ஏற்றுக்கொள்ள இயலாது ,இந்த இயற்கை நமக்குச் சொந்தமானது இல்லை ,நாம் இங்கு வாழ வந்தவர்கள் அவ்வளவே ,இது எதையும் அழிப்பதற்க்கு நமக்கு உரிமையில்லை !!!

                                                                   கன்னித்தமிழ் நாடு 
                                                      கிருஷ்ணசாமி சேகர் 
        


இயற்கை எனது நண்பன் !
வரலாறு எனது வழிகாட்டி !
வாழ்க்கை எனது தத்துவம் !

மேதகு வே .பிரபாகரன்         

உண்மை சுடும்

                                             உண்மை சுடும்  


நான் அடிப்படையில் ஒரு விவசயக்குடும்பத்தைச் சேர்ந்தவன் பயிர்களை நேசிப்பவன் ஆனால் எம் வாழ்க்கை என்றுமே வளமாக இருந்தது இல்லை ! காரணம் பல ,பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் சொன்னது போலவே"காடுவேளைஞ்சென்னமச்சா நமக்கு கையும்காலும் தானே மிச்சம் "என்றானே அது இன்றளவும் உண்மையாகவே உள்ளது 
அது மாறி விடாமல் காப்பாற்றிக்கொண்டு உள்ளார்கள் இங்குள்ள அரசியல் வியாதிகள் .
உங்களுக்கு தெரியும்  தமிழ் சினிமா என்றதும் நினைவுக்கு வருவது மதுரை மாவட்டம் !
ஆனால் தமிழ்த் தேசியம் என்றதும் நினைவுக்கு வருவது கடலூர் மாவட்டம்!
இங்கிருந்து தான் வறுமைக்கு எதிராகவும் !அரசுக்கு எதிராகவும் முதன் முதலில் போராட்டம் வெடித்தது ,அது இன்றும் பல் வேறு வடிவங்களில் தொடர்கிறது ,ஆனால் இன்னும் கூட அரசுகள் ஏன்  இந்த போராட்டம் என்னும் புரிந்துணர்வை எட்டவில்லை அல்லது புரியாதது போல் நடிக்கிறது ,இது தொடருமானால் இந்த போராட்டங்களும் தொடராத்தான் செய்யும் ,வறுமையால் இவர்கள் இழந்தது கல்வி ,வேலை வாய்ப்பு ,அதனால் தொடரும் ஏற்றத் தாழ்வு !

கன்னித்தமிழ் நாடு 
கிருஷ்ணசாமி சேகர்