எப்படி நேர்ந்தது இந்த அவலம் ?
நான் 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் (சீனாவின் டாலியான் மாகாணதில்) இருந்து " சொங் டொக் பிரைட் "என்ற கப்பலில் வியட்நாம் நோக்கி பயணத்தை தொடங்கினோம் (இந்த கப்பல் சாதாரண கப்பல் அல்ல கடலில் இருந்து குருடாயில் எடுப்பதற்கான கப்பல் இதை FPSO என நாங்கள் அழைப்பது இது கடலில் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக நங்கூரம் இடப்பட்டு கட்டப்பட்டிருக்கும் இது ஒரு எண்ணை துரப்பண்ண தொழிற்ச்சாலை )
சரி நான் வியட்நாம் போவது முதல் முறை என்பதால் எனக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காரணம் இளம் வயதில் நான் தேடித் தேடி படித்த வரலாற்று புத்தகங்கள் தான் காரணம் ,வியட்நாமியர்கள் பிரஞ்சு காலனியை எதிர்த்து போராட்டத்தை தொடங்கி , உலகத்திலேயே அமெரிக்காவையே தோற்கடித்த வரலாறு அவர்கள் உடையது அல்லவா ? ஹோ சி மின்னின் வரலாற்றை எத்தனை முறை வாசித்திருக்கிறே அந்த மண்ணை நான் காண்பதற்காக என் உள்ளம் மிகுந்த ஆவலோடு இருந்தது , தென் சீனக் கடலில் ,தய்வான் , பிலிப்பின் வழியாக 32 ஆம் நாள் வியட்நாம் நாட்டின் 'வுங்க்தாவ்' கடற் கரையை அடைந்தோம்,நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன் அப்போதும் கூட அவர்களின் இடையறாத போராட்டமே என் முன் நின்றது ,எங்கள் நண்பர்களோடு நாங்கள் சிறிய படகு ஏறி கரையை அடைந்தோம் அங்கிருந்து எங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த ஹோட்டலுக்கு சென்றோம், நானும் நண்பர் (ரமணாவும் இவர் ஆந்தராவை சேர்ந்தவர்) இருவரும் மாலை 4 மணிவாக்கில் வெளியில் கிளம்பி அந்த கடற்கரை நகரைத்தைச் சுற்றிப்பார்க்கலாம் என்பது எங்களின் திட்டம் ,முதலில் பணத்தை மாற்ற வேண்டும் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் 100 சிங்கப்பூர் டாலரை கொடுத்து பணத்தை மாற்றினேன் , பத்து லட்சம் டொங் வியட்நாம் பணம் கொடுத்தார்கள் அதுவே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது ,அதன் பின் மேலும் அதிர்ச்சி ஹோட்டலை விட்டு தெருவில் இறங்கி நடக்கத்தொடங்கியதும் ஒரு 30 அல்லது 35 வயது மதிக்கத்தக்க பெண் எங்களை பார்த்து 'சார் யு வாண்ட் யங் லேடி' என்றார் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை 'நோ ' என்று சொல்லிவிட்டு இன்னும் கொஞ்சதூரம் சென்றதும் 8 அல்லது 10 வயது சிறுவன் ஒருவன் ஓடி வந்து 'ரமணாவின் 'காலை பிடித்துக்கொண்டான் சார் கிவ் மி ஒன் டாலர் , சார் கிவ் மி ஒன் டாலர் ,(பள்ளி சீருடையை கூட கழட்ட வில்லை ) சடாரென ஆளுக்கு ஒரு டாலர் காசை கொடுத்ததும் அவன் எடுத்துக்கொண்டு ஓடுகிறான் தூரத்தில் அவனது அப்பா , அம்மா அவனது தங்கையாக இருக்கும் என நினைக்கிறேன் ஒரு பெண் (நம் ஊரில் கூட நிறைய சிறு பிள்ளைகள் பிச்சை எடுக்கிறார்கள் )
ஆனால் எனக்கு என்னவோ போல் இருந்தது ,ஒரு 150 மீட்டர் தூரம் கூட நடந்து இருக்க மாட்டோம் அதற்குள் ஆறு , ஏழு பேர்கள் வந்து உங்களுக்கு எப்படியான பெண் வேண்டும் என கேட்கிறார்கள் ,நாங்கள் இருவரும் செய்வது அறியாமல் அங்கிருக்கும் ஒரு கடைக்குள் நுழைந்தோம் ,அந்த நேரம்
வியட்நாமை பற்றிய என்னுடைய எல்லா கனவுகளும் தகர்ந்து போனது ,பள்ளிக் கூட வாசலில் நின்று பெண் பிள்ளைகளை ஹோட்டலுக்கு கூட்டிச் செல்வதையும் ,பெண்களை சந்தையில் காய் கறி விற்பது போல் கூவிக் கூவி விற்பதையும் வியட்நாமில் கண்டேன் , நான் பல நாடுகளுக்கும் சென்று இருக்கிறேன்,சிங்கப்பூர் ,மலேசியா ,தாய்லாந்து ,சீனா ,தென்னாப்ரிக்கா,பிரேசில் என .எல்லா நாடுகளிலும் பாலியல் தொழில் இருக்கிறது ஆனால் வியட்நாமை போல் அல்ல ,அன்று இரவு சரியான உறக்கம் இல்லை ஏன் இந்த நிலை ? உண்ண உணவில்லை வறுமை ,சரியான கல்வி இல்லை, பெறும் பகுதி (எந்த நேரமும் போதை) ஆண்கள் வேலைக்குச் செல்வதுயில்லை எல்லாம் பெண்கள்தான் , ஆம் டாலரின் முன் சுய பொருளாதாரத்தை
மட்டும் வைத்துக்கொண்டு எதையும் செய்ய முடியாமல் போனது , வியட்நாமில் கம்யூனிசம் கேள்விக்குறியாகி இருக்கிறது என்றே நான் கருதுகிறேன் ,
இரண்டு நாள் விடுமுறையும் , மூன்று நாள் ட்ரெயினிங் (ஹெலிக்கப்டரில் விபத்து ஏற்பட்டு கடலில் விழுந்ததால் எப்படி தப்பிப்பது ,கப்பலில் தீ விபத்து ,அல்லது கப்பல் மூழ்குவது என ஏதும் நடந்ததால் )எப்படி தற்காத்துக் கொள்வது என்று, இதையெல்லாம் முடித்து விட்டு ஆறாம் நாள் ஹெலிக்காப்டரில் 2 மணி நேரம் பயணித்து எங்கள் கப்பல் இருக்கும் துறப்பண்ண மேடையை அடைந்தோம் ,அந்த நாட்டின் சட்டப்படி முப்பது நாட்கள் தான் கடலின் உள்ளே இருக்க முடியும் (இது நாட்டுக்கு நாடு மாறுபடும்) பின் மீண்டும் கரைக்கு வந்து 10 நாள் கழித்து தான் கடலுக்குள் போகமுடியும் நாங்கள் தங்கி இருப்பது எல்லாம் ஸ்டார் ஹோட்டல் தான், எல்லாம் கம்பனி தருகிறது என்னிடம் கேட்டார்கள் நீங்கள் ஹோட்டலில் தங்கி இருக்கிறீர்களா அல்லது ஊருக்கு போய் வருகிறீர்களா என நான் ஊருக்கு போகிறேன் என்று சொல்லி விட்டேன் அவர்களும் ஒத்துக் கொண்டார்கள் ,காரணம் விமான பயணச் சீட்டை விட ஹோட்டல் பில் அதிகம் ,அந்த நகரத்தில் இருந்து ஹோ சி மின் சிட்டிக்கு வரவேண்டும் விமான நிலையம் ,இப்படியே இரண்டு பயணம் முடிந்தது மூன்றாவது பயணம் நான் ஹோ சி மின் சிட்டி விமான நிலையத்தில் என்னுடைய பைகளை எடுத்துக் கொண்டு வெளியேறும் போது கஸ்டம்ஸ் அதிகாரி என்னுடைய பாஸ் போர்ட்டை வாங்கி நீண்ட நேரம் பார்த்தார் அதில் ஒவ்வொரு மாதமும் வியட்நாம் வந்து போனதற்கான முத்திரை பதியப்பட்டிருந்ததை பார்த்து நீ என்ன வேலை பார்க்கிறாய் எங்கே பார்க்கிறாய் என
எழுதிக் கொடு என்றார் ,நான் வேலை பார்ப்பது கடலின் உள்ளே கப்பலில் அதற்கு முகவரியெல்லாம் எழுத முடியாது நான் என்னுடைய கம்பனியின்
வியட்நாம் முகவரி அட்டையை தந்தேன் ,அவருக்கு நம்பிக்கை வரவில்லை சரி எங்கிருந்து வருகிறாய் என்றார் ,இந்தியாவில் இருந்து என்றேன் சரி உன்னுடைய 'ஐ டி'கார்டை கொடு என்றார் நான் இந்தியாவில் ஐ டி கார்ட் இல்லை என்று சொல்லி என்னுடைய ஓட்டுனர் அட்டையையும் இன்கம்டேசன் அட்டையையும் கொடுத்தேன் ,பின்பும் கூட அவனுக்கு என் மேல் நம்பிக்கை வரவில்லை என்னை, கூட்டிக் கொண்டு மேலதிகாரியிடம் சென்றான் அவனும் எல்லாவைற்றையும் சோதித்து விட்டு ,என்னை பார்த்து 'யு ஆர் எல் டி டி யி 'என்றான், நானும் சிரித்துக் கொண்டே 'ஒய் யு ஆஸ் மி திஸ் கொஸ்டின் 'என்றேன் ,அதற்கு அவன் சொன்னான் உன்னை போன்ற முகபாவம் உடையவர்கள்' பைட்டிங் டு சிறிலங்கன் ஆர்மி ,ஐ ஸீ த டிவி நியூஸ் என்றான் ' இதற்குள் 40 நிமிடங்கள் ஆகிவிட்டிருந்தன என்னை கூட்டிச் செல்ல கம்பனியில் இருந்து வந்த கார் ட்ரைவர் என்னை தேடிக்கொண்டு கஸ்டம்ஸ் கவுண்டர் வரை வந்து விட்டார் பின் அவர்களுக்குள் வியட்நாமிய மொழியில் பேசிக்கொண்டு ஏதோ முடிவு செய்து வெளியில் விட்டார்கள் .நான் இதை என் வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வுகளில் ஒன்றாகவே நினைக்கிறேன் .
நன்றி
என்றும் அன்புடன்
கிருஷ்ணசாமி சேகர்
கன்னித்தமிழ் நாடு