Tuesday, January 22, 2013

மனிதம்




கலையுரைத்த கற்பனையை நிலையென கொண்டாடும்!
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக!    
என்றும் ,
"வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்
என்றும் ,இந்த மக்களை கண்டு வாடியவன் ,
" இராமலிங்க சுவாமிகள்
அந்தப் பகுதியில் பிறந்தவன் நான் என்பதில் எனக்கு எப்பவுமே ஒரு மகிழ்வுண்டு ,ஏனெனில் நான் பிறந்ததில் இருந்து என்னை நேரடியாக பார்த்து நீ என்ன சாதி என்று கேட்டதில்லை ,ஆனால் 1994 ஆம்ஆண்டு நான் என் நண்பனின் வீட்டிற்கு விருதுநகர் மாவட்டம் ,திருவில்லி புத்தூரை அடுத்து உள்ள "மம்சா புறம்"(இந்த ஊரின் உண்மையான பெயர் முகம்மது கான் சாகிப் புறம் என்றும் அவன்தான் மருதநாயகம் என்றும் கூருகின்றனர் சிலர் உண்மை தெரிந்த வர்கள் சொல்லவும்என்ற ஊருக்குச் சென்றேன் நான் முதன் முதலாக என் நண்பனுடன் அவர் வீட்டிற்கு செல்கிறேன் நான் திருவில்லி புத்தூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன் நண்பன் சைக்களில் வந்து கூட்டிச் சென்றான் ,காலை நேரம் என்பதால் அவர்கள் வீட்டில்
அம்மா ,அப்பா மற்றும் அவனது தங்கை என எல்லோரும் வீட்டில் இருந்தனர் ,நான் உள்ளே நுழையும் போதே யாரப்பா அது என மகனை கேட்டார் 
அதற்கு அவன் அப்பா இவர் என்னுடைய நண்பர் என்னுடன் வேலை பார்க்கிறார் சென்னையை சேர்ந்தவர் என்று சொன்னான் ,எனக்கு திடீரென டூ தூக்கிப்போட்டது காரணம் இவன் ஏன் பொய் சொல்கிறான் அவன் அப்பாவிடம் நான் கடலூர் பகுதியை சேர்ந்தவன் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும் ,நானும் பேசாமல் இருந்து விட்டேன் எனுக்கு ஒரு நாற்காலியும் அவருக்கு ஒரு நாற்காலியும் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார் அப்பறம் 
தம்பி என்ன படிச்சிரிக்கிங்க என்று கேட்டார் அடுத்து உங்க அப்பா என்ன வேலை பார்க்கிறார் என்றார், நான் என் அப்பா நான் சிறுவயதிலேயே இறந்து விட்டார் என்றேன் ,அம்மா என்ன செய்யறாங்க என்றார் ,அவங்க வீட்லதா இருக்காங்க என்றேன் அவர் என்ன நினைத்தாரோ நீங்க என்ன ஆளுங்க 
என்றார் எனக்கு ஒன்றும் புரியவில்லை நான் திரும்பவும் என்னங்கய்யா கேட்டீங்க என்றேன் அதுற்குள் நண்பன் முந்திக்கொண்டு அவுங்க நம்ம ஆளுங்க தான் என்றான்  அப்போதும் கூட எனக்கு  ஒன்றும் புரியவில்லை ,அதற்குள் காபி தந்தார்கள் குடித்து விட்டு காட்டுக்கு போய் வருவோம் வாங்கண்ண என்றான் நான் மீண்டும் அவன் அப்பாவிடம் அய்யா நாங்க  காட்டுக்கு போய் வருகிறோம் என கூறி விடை பெற்றேன் இருவரும் நடந்து ஊரை கடந்து நெடியதுயர்ந்த பனைகளும் வேலிக் கருவை முட்களுமாக அடர்ந்து கிடந்த பாதையை கடந்து வயல் வெளியை அடைந்தோம் அங்கு நின்று இதுதான் எங்கள் காடு என்றான் ,அதை தொடர்ந்து மேற்க்கே வேறு ஊர்கள் ஏதும் ஊர்கள் இல்லை மேற்குத் தொடர்ச்சி மலைதான் இருக்கிறது திரும்பவும் வீட்டிற்கு வந்து எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு விடை பெற்றேன் நண்பன் மீண்டும்  திருவில்லி புத்தூர் பேருந்து நிலையத்தில்
கொண்டு வந்து இறக்கி விட்டான் நான் அவனிடமும் சொல்லிக் கொண்டு விடை பெற்றேன் ,அண்ணா என்ன மன்னிச்சுடுங்க எங்க அப்பா உங்க கிட்ட அப்படி கேட்டதற்கு என்றான், நான் அவனிடம் அப்போது தான் கேட்டேன் அமா உங்க அப்பா எங் கிட்ட நீங்க என்ன ஆளுங்க என்று கேட்டாரேஅது என்ன ? அண்ணா நீங்க என்ன சாதின்னு கேட்டார் அது தான் நான் நம்ம சாதின்னு சொன்னேன் ,இப்படி நடக்கும்னு நான் எதிர் பார்க்கலை அண்ணா என்றான் ,எனக்கு உண்மையிலேயே எதுவுமே புரிய வில்லை இது எனக்கு புதிய அனுபவம் நான் எனக்குத் தெரிந்து எங்கள் பகுதியில்  யாரும் யாரைப் பார்த்தும் முகத்துக்கு நேராக நீ என்ன சதி என கேட்டதாக நினைவில்லை ,நான் பலநாள் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து 
இருக்கிறேன் .           

அதன் பின் இரண்டு ஆண்டுகள் கழித்து 1996 ஆம் ஆண்டு அந்த நண்பன் என்னுடைய ஊருக்கு வந்தான் அவன் வந்த போது மார்கழி மாதம் எங்கள் பகுதியில் எங்கு பார்த்தாலும் நிலக்கடலை பயிரிட்டு இருந்தார்கள் அதையெல்லாம் கண்டவன் மிகவும் மகிழ்ச்சியாக உங்கள் ஊர் மிகவும் வளமாக இருக்கிறது அண்ணா என்றான் மிகச் சிறிய கிராமம் ஆனாலும் இந்த ஊரின்    பெயரைதான் என்னால் நம்பவே முடியவில்லை என்றான் (கன்னித்தமிழ் நாடு) காலை சாப்பிட்டு விட்டு இங்கு எங்கேயும் சுற்றிப் பார்க்கலாம் என்றால் சுற்றிப் பார்த்து விட்டு வரலாமா அண்ணா என்றான் நான் யோசித்துவிட்டு அப்படியெல்லாம் புகழ் பெற்ற இடங்கள் ஒன்றும் இல்லை ,வேண்டுமானால் நெய்வேலிக்கோ அல்லது வடலூருக்கோ சென்று வருவோம் என்றேன் சரியென முடிவு செய்து ஆளுக்கு ஒரு சைக்கிளில் புறப்பட்டோம் ,வடலூரில் உள்ள சத்திய ஞான சபைக்கு கூட்டிச் சென்றேன் அதை பார்த்து விட்டு , இராமலிங்க அடிகளார் அவர்கள் சமாதி அடைந்த இடமான "கருங்குழி மேட்டுக் குப்பம் " அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் அங்கு சென்று பார்த்து விட்டு வேறு வழியாக வயல் வெளிகளின் ஊடாக வந்து கொண்டு இருந்தோம் நேரம் மதியம் ஒரு ஆகிவிட்டிருந்தது தண்ணிர் தாகமாக வேறு இருந்தது கொஞ்ச தூரம் சென்றதும் அங்கு ஒரு மோட்டார் இறைத்துக் கொண்டிருந்தது இருந்தது நெல் வயலில் தண்ணிர் பாய்ந்து கொண்டிருந்தது  நாங்கள் கை கால்களை கழுவிக் கொண்டு தண்ணிர் குடித்து விட்டு திரும்புகையில் (அங்கிருந்த தென்னை மர நிழலில் ஒரு பத்து பேருக்குமேலிருக்கும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள் )வயலுக்குச் சொந்தக்கார பெண்மணி தம்பி நில்லுங்க என்றார் ,நாங்கள் நின்றாதும் இங்க வாங்க என சாப்பிடும் இடத்திற்கு அழைத்தார் நாங்க எல்லோரும் சாப்பிட்டுகொண்டு இருக்கோம் நீங்க வந்துட்டு சும்மா திரும்பி போகக்கூடாது என்றார், நான் இல்லம்மா பக்கத்திலதான எங்க ஊரு நாங்க ஊருக்கு போய் சாப்பிட்டுக்கிறோம் என்று மறுத்தேன் இது எங்க வள்ளலார் வாழற இடம் இங்க நாங்க எல்லோரும் வயிறு நிறைய சாப்பிடும் பொது மத்தவங்கள  இங்கிருந்து பசியோட அனுப்பக்கூடாது   கொஞ்சம் சாப்பிட்டு போங்க என்றார் ,பின் நாங்கள் மறுப்பேதும் சொல்லாமல் சாப்பிட்டு விட்டு வந்தோம்,அதன் பின் என் நண்பன் அண்ணா என்னால் இன்னமும் கூட நம்ப முடியவில்லை ,இப்படியும் கூட நம் நாட்டில் மனித நேயத்தோடு இருக்கிறார்கள் என்று நினைக்கும் பொது அதே நேரத்தில் என் அப்பாவை போன்றவர்கள் இன்னமும் சாதியை கட்டிக்கொண்டு மிருகமாய் வாழ்வதை என்றான் , நான் சொன்னேன் இங்கேயும் சாதிகள் எல்லாம் இருக்கத்தான் செய்கிறது ஆனால் வெளிப்படையாக காட்டிக்கொள்வது இல்லை என்றேன் ,எப்படியோ நான் என் வாழ்நாளில்மறக்கமுடியாத ஒரு நிகழ்வுஇது என்றான் ,ஆம் சில நேரங்களில் நாம் நம்மை அறியாமல் பாடம் படிக்கிறோம் .
என்றும் அன்புடன் ,
கிருஷ்ணசாமி சேகர் ,    
கன்னித்தமிழ் நாடு



No comments:

Post a Comment