நம்பிக்கை
நான் மிகவும் வறிய ,தினமும் மூன்று வேளை சாப்பாட்டிற்கே வழியில்லாத குடும்பத்தில், ஐந்து ஆண்பிள்ளைகளில் இரண்டாவதாக பிறந்தவன் ,
1987 ஆம் ஆண்டு என்னுடைய ஆண்ணன் காதல் தோல்வியில் தற்கொலை( விஷம் அருந்தி ) செய்து கொண்டான் நான் சிறியவனாக 18 வயது இருந்தாலும் அவனிடம் சொன்னேன் இதுவெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது உனக்குங் கீழ இன்னும் நாலு பேரு இருக்கோம்ங்கரத மறந்ததுடாத
என்று ,இங்கு ஒரு விஷயத்தை சொல்லணும் நான் வேலை நேரம் போக மாலை நேரத்தில் நூலகம் சென்று படிப்பேன் அவன் கமலஹாசன் ரசிகர் மன்ற தலைவர் ,அவன் செத்ததின் பின் என்னுள் காதல் என்ற ஒன்றின் மேல் நிறைய விவாதித்துக் கொண்டேன் எனக்கு நானே அன்றே முடிவு செய்தேன் இந்த மாய வலையில் நாம் வீழக் கூடாது என ( காதல் தவறல்ல சோத்துக்கே வழியில்லாதவனுக்கு அது வேற எதுக்கு ) நாங்கள் மூன்று
பேர் மிக நெருங்கிய நண்பர்கள் நான் சேகர் ,திருஞானம்,காசி இதில் நான் மிகவும் குறைந்த படிப்பு திருஞானம் Bsc ,காசி டிப்ளமோ இன்றுவரை இந்த
நட்பு தொடர்கிறது ,அப்போதெல்லாம் நாங்கள் இரவில் மிக நீண்ட நேரம் விவாதித்திருக்கிறேன் கடவுள் ,இலக்கியம் ,வறுமை ,சாதி,அந்நிய படையெடுப்பு ,போன்று இன்னும் எண்ணிலாடங்காதது ,நான் சில காரணங்களால் இவர்களையெல்லாம் பிரிய நேர்ந்தது ஆனாலும் நட்பு தொடர்ந்தது என்னுடைய தொடர்புகள் தமிழ் அறிஞர்கள் புலவர்கள் என, அதில் இன்றும் என்னால் மறக்கமுடியாதவர்கள் திரு ,மாடசாமி அய்யா ,திரு,அறவாழி அய்யா போன்றவர்கள் ,நான் என்னுடைய வேலை காரணமாக திருச்சியில் ஒரு பேராசிரியர் வீட்டில் இரவு வேளைகளில் தங்குவது
வழக்கம் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தான் ஆனாலும் நான் பேராசிரியர் உடன் சந்திக்கும் போதெல்லாம் நீண்ட விவாதத்தில்
ஈடு படுவேன் அவருக்கு ஒரு மகள் மூத்தவள் இரண்டாவது மகன், மகள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டு இருந்தார் இது 1988 ஆம்
ஆண்டு பின் 1989 மத்தியப் பகுதியில் இருந்து நான் அங்கு செல்ல வாய்ப்பில்லை 1990 ஆம் ஆண்டின் இறுதியில் மீண்டும் அவர் வீட்டிற்கு சென்றேன்
அதன் பின் இரு மாத இடை வெளியில் மீண்டும் அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது அன்றும் வழமை போல் காலையில் பேருந்து நிலையம்
செல்ல எல்லோரிடமும் சொல்லி விடை பெற்றேன் ,நானும் கல்லூரிக்கு பேருந்தில் தான் செல்கிறேன் நானும் உங்களோடு வருகிறேன் என்று
என்னோடு கிளம்பினாள் அந்த பெண்ணும் வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தத்திற்கு கொஞ்ச தூரம் நடந்து சென்று கொண்டு இருக்கும் போதே
என்னுடைய வீட்டைப் பற்றியும் என்னுடைய வேலையைப் பற்றியும் கேட்டாள், நான் ஏன் இதை வீட்டில் கேட்கவில்லை என கேட்டேன் இல்லை
இது வரை எத்தனையோ நாள் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிங்க என்னன்னெவொ பேசியிருக்கிங்க அப்பா கூட ஆனா அவங்க கேக்கல அதுதாங்கேட்ட என்றாள் ,அதற்கு நான் என்னுடைய குடும்பத்தை பற்றி சுருக்கமாக சொன்னேன் அதற்குள் மத்திய பேருந்து நிலையம்
வந்து விட்டது ஆனால் ஆவளும் என்னோடு இறங்கினாள் நான் நீ ஏன் இங்கு இறங்குகிறாய் என நான் கேட்டேன் அதற்கு அவள் நான்
உங்களோடு கொஞ்சம் தனியாக பேசவேண்டும் என்றாள் , ஏன் என்ன பேசவேண்டும் என கேட்டேன் நான் கேட்பதை நீங்கள் அப்பாவிடமோ
அல்லது வீட்டில் யாரிடமும் சொல்லக் கூடாது என்றாள் அப்படி என்ன கேட்கப் போற என நான் கேட்டு விட்டு சிரித்துக் கொண்டே நின்றேன்
அவள் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து விட்டு, என் முகத்தை நேராகப் பார்த்து எனுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு நான் என் அப்பாவிடம்
பேசட்டுமா நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்றாள் ,நான் மீண்டும் சிரித்துக் கொண்டே கேட்டேன் நான் என்றாவது
உன்னிடம் தப்பான கோணத்தில் நடந்து கொண்டேனா அல்லது அப்படி பார்த்தேனா என்றேன் ஏன் உனுக்கு அப்படி கேட்க தோன்றியது என்றேன் ,
நீங்கள் அப்படியெல்லாம் நடந்து கொள்ளாததால் தான் உங்களை எனக்குப் பிடித் திருக்கிறது என்றாள் ,நான் கொஞ்ச நேரம் நின்று விட்டு
நான் திருமணம் செய்து கொள்ளும் நிலையில் இப்போது இல்லை நீ நன்றாக படி பின்பு அதைப்பற்றி யோசிக்கலாம் என்றேன் ,பின் என்ன
நினைத்தாளோ நான் தவறாக கேட்டு இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்றாள் ,நான் நிதானமாக நட்புக்கும் உறவுக்கும் உள்ள வேறுபாட்டை நீ சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றேன்
,அவள் எனக்கு கேட்கணும்னு தோணிச்சு கேட்டேன் இதில் தவறு இருக்கிறதா எனக்கு தெரியல என்றாள் ,சரி இது பற்றி பிறகு பேசுவோம் இப்போது நீ கல்லூரிக்கு போ என சொல்லி பேருந்தில் ஏற்றி விட்டு வந்தேன் ,இன்றோடு இருபத்திரெண்டு
ஆண்டுகள் ஆகிறது இது வரை அவர்கள் வீட்டிற்கும் போகவில்லை அவர்களில் யாரையும் பார்க்கவும் இல்லை,
கிருஷ்ணசாமி சேகர்
கன்னித்தமிழ் நாடு
No comments:
Post a Comment