'மாசெதுங்' எவ்வளவு பெரிய உண்மை ......!
எல்லா சாம்ராஜியங்களும்!
எல்லா (சிற்றரசு) பேரரசுகளும்!
எல்லா வல்லரசுகளும்!
எல்லா புட்சு (இராணுவம்)கால்களும்!
எல்லா சனநாயகமும் கூட (எல்லா சனநாயகமும் துப்பாக்கி முனையில் பிறந்தது தான்!என்பது என்னுடைய முடிவு+நம்பிக்கை)
எந்த அரசுகளும் மக்களின் 'இருப்பை' பற்றி கவலை இல்லை! இடப் பெயர்வு பறவைகளுக்கு இயல்பானது! ஆனால்
மக்களுக்கு?? யாரும் இதைப்பற்றி எந்த அரசுகளும் கவலைப்படுவதும் இல்லை.என்னுடைய பெற்றோர் களும்
இடம் பெயர்ந்த வர்கள்தான். தமிழ்நாட்டின் அன்றைய 'தென்னார்காடு மாவட்டம் 'இன்றைய கடலூர் மாவட்டம்.
1960 ஆம் ஆண்டு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் முதல் சுரங்கத்திற்காக "வெள்ளையன் குப்பம்"என்ற (பல) கிராமத்தை காலி செய்யச் சொல்லியது அரசு. வரலாறு தெரியாத காலத்தில் இருந்து வாழ்ந்த மண்ணை
மிகச் சுலாபமாக வெளியேறச் சொன்னது அரசு! சில ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள் ஒரு ஏக்கர் (ரூ3000)
எங்கள் வாழ்வை சில காகிதங்களில் (பணம்)முடித்துவிட்டார்கள்.ஒரு பண்பட்ட நிலத்தை இந்த பணத்தை கொண்டு
செய்ய முடியுமா? நிலத்தை உழுதவனை தவிர யாரும் உணரமுடியாது!!!!
அப்படி வெளியேறிய மக்கள் அங்கிருந்து பத்து கிலோ மீட்டர் கிழக்கு நோக்கி நகர்ந்து 'குறிஞ்சிப்பாடி'க்கு அருகில்
முந்திரிக்காடுகளை வாங்கினார்கள். முந்திரிக்காடுகளை வெட்டி நிலமாக்கினார்கள் அந்த இடத்திற்கு அழகான
பெயார் வைத்தார்கள்.'கன்னித் தமிழ்நாடு'என்று நான் பிறந்தது இங்குதான் எனக்கு எப்போதுமே பெருமைதான்
எங்கள் ஊர் பெயரை சொல்லிக் கொள்வதில்.இன்று (1000) குடும்பங்களுக்கு மேல் வாழுகிறது இங்கு.
எனக்கு ஐந்து வயது முடிந்த பின்னும் எங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இல்லை.பக்கத்தில் உள்ள 'மீனாட்சிப் பேட்டை'
க்கு தான் செல்ல வேண்டும்.என்னுடைய சித்தப்பா எனது தந்தையின் உடன் பிறந்தவர் (பெயர் வீ.ஆறுமுகம்) ஒரு ஆசிரியர் ' எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது 1 -10 -1970 ஆம் ஆண்டு
ஒரு பெரிய முந்திரி மரத்தின் கீழ் பத்து, பதினைந்து பிள்ளைகளை சேர்த்து பள்ளியை ஆரம்பித்தார் நான்
மூன்றாவது மாணவன்.பின் கூரை வேய்ந்த பள்ளியாக மாறியது!அப்போது நேரம் பார்ப்பதற்கு கடிகாரம்
கிடயாது கூரையின் நிழலை பள்ளியின் தரையில் கோடு போல் (கிட்டி அடிப்பதற்கு தோண்டுவோமே)
அது போல்.அதைப் பார்த்து தான் மணி அடிப்போம்.
நான் ஐந்தாவது படித்து முடிக்கும் வரைக்கும் கூட கல் கட்டடம் கிடையாது.பண்ருட்டி இராமச்சந்திரன் மின் துறை
அமைச்சராக இருந்த போது எங்கள் ஊர் மக்கள் கோரிக்கைக்கு இணங்க பள்ளி கட்டடம் கட்ட நிதி ஒதிக்கினார்
அந்த கட்டத்தை எங்கள் ஊரில் ஒருவரே கட்டினார் அவர் பெயர் (ஆதிமூலம்) சென்ற ஆண்டு காலமானார்.
(இதனால் கடனாளி ஆனார் அவர்) ஊர் மக்கள் வீட்டிற்கு ஒருவராய் நின்று போன வேலையை முடித்தோம்.
இதனால் எங்கள் ஊருக்கு சிமிண்டு பூசிய பள்ளி கூடம் கிடைத்தது.
ஆனால் இப்படி வளர்ந்த பள்ளி இன்று மிகப் பெரிய வளர்ச்சி அடைந்து பத்தாம் வகுப்பு வரை உள்ள நடுநிலை பள்ளியாக மாறி உள்ளது .சென்ற ஆண்டு மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றது
"கன்னித் தமிழ்நாடு"
இன்னும்'
நிறைய'
உங்களோடு
பகிர்ந்து கொள்வேன்.
கன்னித் தமிழ்நாடு'
கி.சேகர்
No comments:
Post a Comment