Friday, December 31, 2010

இவர்கள்

தமிழுக்கு அகராதி தொகுத்தவர் 'வேர்ச்சொல்' தேவநேயப்பாவாணர் 
திராவிட ஒப்பிலக்கணம் தந்தவன் 'கால்டுவெல்'  

Tuesday, December 28, 2010

புதிய தமிழ்களம்

இன்பத் தமிழ்  


தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
!

பாரதி தாசன் கவிதை' தமிழுக்கு கூர் தீட்டியவன்'  
 

Sunday, December 12, 2010

இலக்கு

      இலக்கு    

பாதைகள் அற்ற பாதையில்!
என் பயணம் !!
முடியும் போதுதான் தெரியும் 

எங்கு இருக்கிறேன் என்று !!

சாவு கூட சில நேரம் 
வந்து போனது !!
என் பாதைகளில் 
நிழல் தந்த மரங்களை...
எப்படி நினைவிற் கொள்வது ???

காலத்தை தின்று கொண்டு 
வயது போகிறது !!

நான் 
வண்ண ஓவியம் என ...
இருமாந் திருக்கையில்
மேகக் கூட்டமாய்
 கலைந்து போனது !!

  பள்ளமில்லா உலகம் 
பாலைவனம் !!

என்னை இப்படி வேண்டுமானாலும்
நினைவில் கொள்ளலாம் !!!
ஒரு .... 
ஏழை விவசாயின் மகன்,  
ஒரு ....
தமிழன் ,
ஒரு ....
போராளி ?
ஒரு ....
தந்தை ,
ஒரு ....
 மனிதன் !!!

அனால் அதை 
காலம் முடிவு செய்கிறது .....
நான் ....!!!
அதனுடன் செல்கிறேன் .

கன்னித்தமிழ் நாடு,       
கி.சேகர்